அறந்தாங்கி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடப்பிரச்னை காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 9 பேர் அரசு மருத்துவமiனையில் சிகிச்சையில்
உள்ளனர்.அறந்தாங்கி அருகே மீமிசல் அருகில் முத்துகுடா என்ற கடலோர கிராமம்
உள்ளது இந்தகிராமத்தின் மையப்பகுதியில் ஒரு பொதுவான காலிமனை இருந்தது இதை இருதரப்பினரும் உரிமை கொண்டிய நிலையில் ஒரு தரப்பினரை சேர்ந்தவர் அதை கல் ஊன்றி அடைக்க முற்பட்டபோது நேற்றிரவு இரு தரப்பினருக்கும் வாய்சண்டை ஏற்பட்டுஅதுவே கை சண்டையாக மாறி ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி மோதிக்கொண்டனர்.

இதில் ஒரு தரப்பில் ரகு(47) ,ராம்குமார்(38) ஆகிய இருவரும மற்றொரு தரப்பில்
அயுப்கான்(47) ராவுத்தர்(57) பாத்திமாகனி(56) ராஜ்முகமது(38) பதர்நிசா(50)
அப்துல்ஹமீது(43) ஜின்னா(28) ஆகிய 7 பேர்களும் ஆக மொத்தம் இரு தரப்பினையும்
சேர்ந்த 9 பேர் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் இரு
தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் கோட்டைப்பட்டிணம் டிஎஸ்பி காமராஜ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending