Homeஉள்ளூர் செய்திகள்ஸ்மார்ட் கார்டில் குடும்ப தலைவர் படத்துக்கு பதிலாக செருப்பு படம்

ஸ்மார்ட் கார்டில் குடும்ப தலைவர் படத்துக்கு பதிலாக செருப்பு படம்

20170917 192032 - Dhinasari Tamil

புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டில் (குடும்ப அட்டை) ஏராளமான குளறுபடிகள்,
தவறான பதிவேற்றம் காரணமாக பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், குடும்பத் தலைவரின் உருவப்படத்துக்குப் பதிலாக ஒற்றை கால்
செருப்புடன் கூடிய படம் அச்சிடப்பட்டு அட்டை விநியோகம் செய்துள்ள விநோதம்,
பாப்பிரெட்டிப்பட்டி மணியாம்பாடியில் நிகழ்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மணியாம்பாடியைச் சேர்ந்தவர் மகேஷ்
சின்னசாமி.

இவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் அவரது உருவப்படத்துக்குப் பதிலாக
செருப்புப் படம் பதிவேற்றம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், அந்த அட்டையை
பயன்பாட்டுக்கு அவரிடம் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) பார்வதி
கூறுகையில், ஸ்மார்ட் கார்டு பதிவில் புகைப்படம் தவறாகப் பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக குடும்பத் தலைவரான மகேஷ் சின்னசாமிக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் ஒரு புகைப்படம் பெற்று தவறாகப் பதிவாகியுள்ள புகைப்படத்தை திருத்தம்
செய்து புதியதாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றார்.

செய்தி… கே.சி.சாமி

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,140FansLike
377FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,865FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...