ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கோயில் விழா தகராறில் வாலிபரை தாக்கி வாயில் சிறுநீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாணவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கருவானூர் கிராமத்தில் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் விழா கடந்த 3ம் தேதி நடைபெற்றது. அப்போது, அர்சுனன் தபசு தெருக்கூத்து நிகழ்ச்சியில் அதே ஊரைச் சேர்ந்த துரைராஜ் மகன் அரவிந்தன் (20) மற்றும் அவரது நண்பர் பெரிய கணக்கம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (18) உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருவானூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள் 6 பேரும் விழாவில் பங்கேற்றனர். இவர்களுக்கும், அரவிந்தனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், கல்லாவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேரும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் மீது கடந்த 13ம் தேதி அரவிந்தன் கல்லாவி போலீசில் மீண்டும் புகார் ஒன்றை அளித்தார். அதில், திருவிழாவின்போது தன்னையும், நண்பர் தினேஷையும் தாக்கி வாயில் சிறுநீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கோட்டாட்சியர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தினர். இதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து நேற்று தேவேந்திரன் (20) மற்றும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேரையும் கைது செய்து, ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கோயில் விழா தகராறில் இளைஞர் வாயில் சிறுநீர் ஊற்றியதாக 6 பேர் கைது
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கோயில் விழா தகராறில் வாலிபரை தாக்கி வாயில் சிறுநீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாணவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கருவானூர் கிராமத்தில் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் விழா கடந்த 3ம் தேதி நடைபெற்றது. அப்போது, அர்சுனன் தபசு தெருக்கூத்து நிகழ்ச்சியில் அதே ஊரைச் சேர்ந்த துரைராஜ் மகன் அரவிந்தன் (20) மற்றும் அவரது நண்பர் பெரிய கணக்கம்பட்டியைச் சேர்ந்த…
1–2 minutes



Leave a Reply