புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் சங்காபிஷேகம் நடந்தது.
ஆவுடையார்கோயிலில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட திருவாசகம் பிறந்த ஆவுடையார்கோயில் உள்ளது.இக்கோயிலில் கார்த்திகை சோமவாரத்தினை முன்னிட்டு 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி ஆத்மநாதர் சன்னதிபின்புறம் உள்ள குருந்தமூலம் முன்பு சங்கு அடுக்கப்பட்டு சங்காபிஷேகம் நடந்தது ஆத்மநாதருக்கு பாலசுப்ரமணிய நம்பியாரும மாணிக்கவாசகருக்கு தியாகராஜகுருக்களும் அர்ச்சனை செய்தனர்.