lorry accident child died
lorry accident

ஓய்வு பெற்ற பெல் நிறுவனத்தின் அதிகாரியை லாரி மோதியத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள வின்நகர் 4வது தெருவில் சுப்பிரமணிய பாரதியார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெல் நிறுவனத்தில் டி.ஜி.எம் ஆக இருந்து ஓய்வு பெற்றுள்ளளார்.

இந்நிலையில் மதியம் வேளையில் பெல் நிறுவனத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக இவரின் மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணிய பாரதியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அந்த லாரி பெட்டவாய்த்தலை சோதனைச்சாவடியை கடக்கும் போது மடக்கிப் பிடித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற லாரி டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending