தேனி: தேனியில் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்துறை உதவிப் பொறியாளர் நேற்று கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம், பி.சி.பட்டியைச் சேர்ந்த வி.ரவிச்சந்திரன் (40) வேளாண் கருவிகள் விற்பனை செய்யும் டீலராக உள்ளார். இவர் அரசின் மானியத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் விற்றது தொடர்பாக ரூ. 3.45 லட்சத்தை பெற தேனி வேளாண்பொறியியல் துறையிடம் கேட்டிருந்தார். இந்தத் தொகைக்கான காசோலையை வழங்க, வேளாண் உதவிப் பொறியாளர் வி.ராதாகிருஷ்ணன் (46), ரவிச்சந்திரனிடம் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. முடிவில் ரூ. 20 ஆயிரம் தருவதென பேசி முடிக்கப்பட்டது.  ஆனால், லஞ்சம் தர விரும்பாத ரவிச்சந்திரன், தேனி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் அறிவுரைப்படி, ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூ. 20 ஆயிரம் ரூபாய்த் தாள்களை ராதாகிருஷ்ணனிடம் ரவிச்சந்திரன் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ராதாகிருஷ்ணனைப் பிடித்து கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending