சென்னை: ஆண் நண்பர்களுடன் பழகியதால், தனது காதலியைக் கொன்றதாக, தாம்பரம் அருகே கல்லூரி மாணவி கொலையில் கைதான அவரது காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். வடபழனி, சைதாப்பேட்டையைச் சேர்ந்த அந்தோணியின் மகள் கிரேஸி ஷாலினி (21). அரசு பெண்கள் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற கிரேஸி ஷாலினி பின்னர் வீட்டுக்குத் திரும்பவில்லை. இந்நிலையில் தாம்பரத்தை அடுத்த படப்பை ஆரம்பாக்கத்தில் நத்தம் பீவி என்பவரது வீட்டில் கிரேஸி ஷாலினி அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். இது குறித்து தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நத்தம் பீவி வெளியூர் சென்ற போது வீட்டைப் பூட்டி சாவியை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உறவினர் அப்துல் ரசாக்கின் மகன் ரபீக்கிடம் கொடுத்திருப்பது தெரிந்தது. பெயிண்டர் ரபீக்கிடம் போலீசார் விசாரித்த போது காதலியான கல்லூரி மாணவி கிரேஸி ஷாலினியை பூட்டிக் கிடந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரபீக்கை போலீசார் கைது செய்தனர். ரபீக் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில்… நானும், கிரேஸி ஷாலினியும் வடபழனியில் உள்ள பள்ளியில் சிறு வயது முதலே ஒன்றாக படித்தோம். இருவரும் காதலித்து வந்தோம். கல்லூரிக்குச் சென்றது முதல் கிரேஸி ஷாலினி என்னிடம் முன்பு போல் பழகுவது இல்லை. அவள் செல்போனில் ஆண் நண்பர்களுடன் வாட்ஸ்-அப், பேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்தாள். இதனை நான் கண்டித்தும் அவள் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் சாட்டிங்கில் ஈடுபட்டிருந்தார். உறவினர் நத்தம் பீவி வெளியூர் சென்றதால் அவரது வீட்டுச் சாவியை என்னிடம் கொடுத்து இருந்தார். கடந்த சனிக்கிழமை கிரேஸி ஷாலினியை அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது ஆண் நண்பர்கள் குறித்து கிரேஸி ஷாலினியை கண்டித்தேன். அவள் என்னைத் திட்டினாள். ஆத்திரம் அடைந்த நான் மாடு கட்ட வைத்திருந்த கயிறால் அவளது கழுத்தை நெரித்துக் கொன்றேன். பின்னர் பயத்தில் வீட்டைப் பூட்டி விட்டு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
Less than 1 min.Read
ஆண்களுடன் பழகியதால் காதலியைக் கொன்றாராம்: கல்லூரி மாணவி கொலையில் காதலன் வாக்குமூலம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் அக்.05 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் - அக்.05ஸ்ரீராமஜயம் - ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்||श्री:||...
துணுக்குகள்
டிவி ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் ‘டேமேஜ்’தான்!
நம்மில் பலரும், வீட்டில் உள்ள மற்ற பொருட்களை போலவே ஸ்மார்ட் டிவியையும் சுத்தம் செய்யும் பழக்கத்தினை கொண்டுள்ளோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா?
சற்றுமுன்
வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு!
நவம்பர் 2024க்கான மழை மற்றும் வெப்பநிலைக்கான கண்ணோட்டத்தை அக்டோபர் 2024 இறுதியில் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறைவெளியிடும். வடகிழக்குப்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் அக்.04 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
இந்தியா
தாம்பரம்- கொச்சுவேலி ரயில் மீண்டும் இயக்கம்! முன்பதிவு தொடக்கம்!
இந்த ரயிலை நிரந்தரமாக சாதாரண முன்பதிவு பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத சாதாரண ரயில் பெட்டிகள் இணைத்து இயக்க தமிழக கேரள ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்
Topics

ஆன்மிகச் செய்திகள்
ஸ்ரீவி., வடபத்ரசாயி பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலின் பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கல்வி
மாணவர்களுக்கான ‘திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி’; மதுரை ஆட்சியர் அழைப்பு!
1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகையாக ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பெறும்.
ஆன்மிகச் செய்திகள்
பழநி கோயிலுக்கு நீதிமன்றத்தால் … ஒரே வருடத்தில் ஒன்றரை கோடி ரூபாய் வசூல்!
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு, கைப்பேசி பாதுகாப்பு நிலையத்தின் மூலம், ஓராண்டில் ரூ. 1.51 கோடி வசூல் ஆகியுள்ளது.