பிரபல ரவுடி பினு மற்றும் அவனது கூட்டாளிகளான 6 ரவுடிகளும் சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி காவல்துறையிடம் சரணடைந்த ரவுடி பினு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிடிப்பட்ட அவனது 75 கூட்டாளிகளும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பினுவின் எதிரணியைச் சேர்ந்த அரும்பாக்கம் ராதா மற்றும் அவனது கூட்டாளிகளும் புழல் சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர். பல்லு மதன், சிடி மணி கூட்டாளிகள், வட சென்னை ரவுடி நாகேந்திரன் கூட்டாளிகள் எனச் சென்னை முழுவதும் கைதான சுமார் 400 ரவுடிகள் புழலில் உள்ளனர்.
இப்படி, ரவுடி குழுக்களிடையே மோதல் உண்டாவதற்கான சூழல் இருப்பதால் ரவுடி பினு மற்றும் அவனது முக்கியக் கூட்டாளிகள் 6 பேரை வேலூர் சிறைக்கு மாற்ற சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.