exam hall - 2026

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நாளை முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்குகின்றன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12,337 பள்ளிகளில் இருந்து 9,64,491 மாணவ – மாணவிகள், மற்றும் 36,649 தனித் தேர்வர்கள் என மொத்தம் 10,01,140 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளில் மாணவர்கள் யாரும் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களைக் கண்டறிந்து தடுக்க  6,900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் தவிர, தமிழகத்தின் வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை, புழல் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள 186 கைதிகள் 10-ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதுகின்றனர். இவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய 4 சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending