ஈரோடு மாவட்டத்தில் திமுக.,வின் 2 நாள் மண்டல மாநாடு மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சரளையில் திமுகவின் ஈரோடு மண்டல மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டுப் பந்தலுக்கு வந்தார். அவருக்கு, மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி திமுக., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் இதன் பின்னர், திமுக., எம்.எல்.ஏ. கோவி.செழியன் 100 அடி உயரக் கம்பத்தில் திமுக., கொடியை ஏற்றி, மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ரிப்பன் வெட்டி மண்டல மாநாட்டைத் தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் முக்கியப் பங்காற்றினார். இந்த மாநாட்டுக்கு வந்திருந்த நடிகர் உதயநிதி ஸ்டாலின், திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இனமான பேராசிரியர் க.அன்பழகன், துரைமுருகன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.