ராமநாதபுரத்தில் பாஜக., பிரமுகரை சமூக விரோதிகள் சிலர் அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பவர் வீரபாகு. இவரை இன்று இரவு ராமநாதபுரம் M.G பள்ளி அருகே மர்ம நபர்கள் சிலர் கொடுரமாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். அவர் உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக.,வினர் கூறியபோது, ராமநாதபுரம் மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ளார் வீரபாகு. அவருக்கு வயது சுமார் 37 இருக்கும். அவரைத்தான் இன்று இஸ்லாமிய பயங்கரவாதிகள் தனியாக அழைத்துச் சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆட்டோ ஓட்டுனரான வீரபாகுவை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் 3 பேர். அங்கே ஏற்கெனவே இருளில் இரண்டு பேர் மறைந்து இருந்துள்ளனர். ஐந்து பேரும் சேர்ந்து அரிவாள் மற்றும் கொடூர ஆயுதங்களால் வீரபாகுவைத் தாக்கியுள்ளனர். அவர் ஓடிச் சென்று ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடி அவ்வழியே சென்ற பஸ்ஸில் ஏறி தப்பித்து பாதுகாப்பு கோரி போலீஸ் ஸ்டேஷன் சென்றார். பின் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறினர்.