சென்னை: காவிரி விவகாரத்தில் திமுக., எம்.பிக்கள் முதலில் ராஜினாமா செய்யட்டும் என பாஜக., மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி பிரச்னையை தீர்க்க மத்தியில் இருந்த காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த போது நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, நான் ராஜினாமா செய்வதால், காவிரி பிரச்னையில் தீர்வு கிடைக்கும் என்றால், நிச்சயமாக நான் ராஜினாமா செய்வேன் என்று கூறியிருந்தார் திமுக., எம்.பி. கனிமொழி. இந்நிலையில், தமிழிசை சௌந்தர்ராஜன், காவிரி விவகாரத்தில் திமுக., எம்.பி.க்கள் முதலில் ராஜினாமா செய்யட்டும் என்று கூறினார்.