railway news - 2026

செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

நெல்லை சற்றுமுன் பொது தகவல்கள்
railway news - 2026
#image_title

திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.

தென்காசி மற்றும் செங்கோட்டை பிரிவில் உள்ள எண் 503-ஐக் கொண்ட இன்டர்லாக் செய்யப்பட்ட பொறியியல் பிரிவு ரயில்வே லெவல் கிராசிங்கிற்கு (Interlocked Engineering Level Crossing) பதிலாக சாலை மேம்பாலம் (ROB) அமைப்பதற்கான ‘கிரிடர்’ (girder) பொருத்தும் பணிக்காக, 29.08.2026 முதல் 31.08.2026 வரை (3 நாட்கள்) ரயில் பாதையில் பராமரிப்புப் பணி (Line/Power Block) மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்பணியை மேற்கொள்ள வசதியாக ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

  1. 29.08.2026, 30.08.2026 மற்றும் 31.08.2026 ஆகிய தேதிகளில் *செங்கோட்டையிலிருந்து மதியம் 2:20 மணிக்கு கிளம்பும்.

56776 செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் , செங்கோட்டை – தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயில் தென்காசியில் இருந்து கிளம்பும்.

29.08.2026, 30.08.2026 மற்றும் 31.08.2026 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து காலை 9:50 மணிக்கு கிளம்பும்* 56773 திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் தென்காசி – செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்த ரயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.