குற்றாலம் சாரல்திருவிழா ஆட்சியர் ஆலோசனை

.நீதி மன்ற ஆணைப்படி குற்றால அருவிகளில்சோப்பு, ஷாம்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது போல் பிளாஸ்டிக் பைகள் முற்றுலும் ஒழிக்கப்படும்

குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம்
மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் : பங்கேற்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதே போல் நெல்லை மாவட்டத்திலும் பரவலாக அனைத்து இடங்களிலும் பருவ மழை பெய்து வருகிறது.

குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இடைவிடாது பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த காலநிலையை அனுபவிக்க நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகின்றனர். இதனிடையே குற்றாலத்தில் சீசன் காலமான
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களிலும் மாதங்களிலும் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து கொண்டே வருகிறது.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சுற்றுலாத்துறை சார்பில் சாரல் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சீசன் களைகட்டியுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான சாரல் விழா இதுகுறித்து முன்னோடி ஆய்வுக்கூட்டம் குற்றாலத்தில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். நீதி மன்ற ஆணைப்படி குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது போல் பிளாஸ்டிக் பைகள் முற்றுலும் ஒழிக்கப்படும்.

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படும், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும், மாற்று திறனாளிகள் அருவி பகுதிகளுக்கு சென்றுவர சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும், பாதுகாப்பு வசதிக்காக கண்காணிப்பு கேமராக்கள் காவல்துறை சார்பில் பொருத்தபட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வர் என தெரிவித்தார்.