தென்மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம்!

தென் மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மீண்டும் துவங்கி விட்டது.,

நெல்லை மாவட்டம் குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் இன்று காலையில் இதமான மழை பொழிந்தது இப்போது மேகமூட்டமுடன் ஜில்,ஜில் குளிர் காற்று வீசி வருகிறது,

திருநெல்வேலி மேற்கு பாபநாசம் ,மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சில இடங்களில் மழை பொழிந்து வருகிறது. மழை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து இன்று மாலைக்குள் சில இடங்களில் மழை பொழியும் என்றும், திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு பகுதிகளில் மட்டுமே மழை பொழியும்.

19.06.2018 *? நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அணைகளின் நீர் மட்ட விபரம்-

பாபநாசம் காரையார் அணை:

* உச்ச நீர் மட்டம் : 143.00 அடி
* இன்றைய மட்டம் :80.35அடி
* நீர் இருப்பு.2084.10 மி.க.அடி
* நீர் வரத்து :1289.81 க.அடி
* நீர் வெளியேற்றம் :504.75.க.அடி

சேர்வலாறு அணை:

* உச்ச நீர் மட்டம் : 156.00 அடி
* இன்றைய மட்டம் : 97.44.அடி
* நீர் இருப்பு :427.00 மி.க.அடி

மணிமுத்தாறு அணை :

* உச்ச நீர் மட்டம்: 118.00 அடி
* இன்றைய மட்டம் :84.92.அடி
* நீர் இருப்பு :2548.00.மி.க.அடி
* நீர் வரத்து .105.00 க.அடி
*நீர் வெளியேற்றம்: 75.00 .க.அடி

கடனாநதி அணை:

* உச்ச நீர் மட்டம் : 85.00 அடி
* இன்றைய மட்டம்: 65.90அடி
* நீர் இருப்பு : 148.28 மி.க.அடி
* நீர் வரத்து : 44.00 க.அடி
* நீ‌ர் வெளியேற்றம்: 10 க.அடி

இராமநதி அணை:

* உச்ச நீர் மட்டம் : 84.00 அடி
* இன்றைய மட்டம்: 77.50அடி
* நீர் இருப்பு:82.45 மி.க.அடி
* நீர் வரத்து .44.81 க.அடி
* நீர் வெளியேற்றம் : 5.00 க.அடி

மழை அளவு (மிமீ)
* பாபநாச மேல் அணை :7.00 மிமீ
* சேர்வலாறு :2.00 மிமீ