பூ, பொட்டு வைக்காதே என அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் உத்தரவு! பெற்றோர் போராட்டம்

மாணவிகளை பூ, பொட்டு வைத்து வரக் கூடாது என்று அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டு முற்றுகைப் போராட்டம் நடத்தப் பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த புதூரில் மாணவிகள் எவரும் பூ, பொட்டு வைத்துக் கொண்டு பள்ளிக்கு வரக் கூடாது என உத்தரவிட்ட பெண் தலைமை ஆசிரியரைக் கண்டித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருப்பவர், ராணி பாய் என்பவர். இவர், மாணவிகள் எவரும் பூ, பொட்டு வைக்கக் கூடாது என்றும், கயிறு கட்டக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளதாக புகார் கூறப் பட்டது.

இதனைக் கண்டித்து, அரசுப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில்  கலைந்து சென்றனர்.