எய்ம்ஸ் அமையவுள்ள தோப்பூர் துணைக்கோள் நகரமாகிறது!

எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை மாவட்டம் தோப்பூர் உச்சப்பட்டியில், துணைக்கோள் நகரம் அமைக்கும் மேம்பாட்டுப் பணிகள் முடிவுறும் நிலையில் இருப்பதாக, வீட்டு வசதித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மதுரை மாநகர  விரிவாக்கப் பகுதியில் அமைந்துள்ள தோப்பூர் உச்சப்பட்டியில் அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளுடன் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான மேம்பாட்டுப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன.

மத்திய பூங்கா, வணிக வளாகம், கூட்ட அரங்கம் ஆகிய வசதிகளுடன் கூடிய தன்னிறைவு பெற்ற ஒரு நகரியமாக துணைக்கோள் நகரத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.