
சென்னை: ஆடிப்பூர விழாவுக்கு மேல்மருவத்தூருக்கு வருமாறு பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு சித்தர் பீடத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள மேல்மருவத்தூர் பிரபலமான தலமாக விளங்குகிறது. இங்குள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இங்கே ஆடி மாதம் நடைபெறும் பூர விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. பெருமளவிலான பக்தர்கள் வருகை தரும் அந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு சென்னைக்கு வந்திருந்த பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷாவிடம் சித்தர் பீடத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் நேற்று அமித்ஷாவை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
அடுத்த மாதம் ஆடிப்பூர விழா கொண்டாடப் படுகிறது.