மதுரை: சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் (மதுரை) சார்பில் இந்தியப் பொருளாதாரம் இன்றைய நிலை மற்றும் எதிர்கால பார்வை என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. ஜூலை 22, ஞாயிற்றுக் கிழமை மதுரை கோகலே ரோடில் உள்ள லெட்சுமி சுந்தரம் அரங்கில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், இந்திய அரசின் நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்தக் கருத்தரங்கில் இந்தியப் பொருளாதாரம் ஒரு பார்வை என்ற தலைப்பில், சுந்தரம் டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட் செயல் இயக்குனர் மிருதுளா ரமேஷ் உரையாற்றினார். தியாகராஜர் மில்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கருதுமுத்து தி.கண்ணன் தலைமை உரை நிகழ்த்தினார்.
சுதேசி விழிப்புணர்வு இயக்க அகிலபாரத இணை அமைப்பாளர் இரா.சுந்தரம், மாநில அமைப்புச் செயலாளர் ஆதிசேஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஸ்ரீகிருஷ்ணா கல்சுரல் டிரஸ்ட் மேலாண்மை இயக்குனர் என்.ஸ்ரீனிவாசன் வாழ்த்து கூறினார்.