முதுகையே படிக்கட்டாக மாற்றி கர்ப்பிணி பெண் இறங்க உதவிய காவலர்களை அழைத்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.
சென்னை கோட்டை அருகே மின்சார ரயில் சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டது.
அப்போது பயணிகள் இறங்க காவலர்கள் உதவி செய்தனர். அந்நிலையில், ரயிலில் இருந்து இறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி பெண் கீழே இறங்குவதற்கு ஆயுதப்படை காவலர்கள் தனசேகர், மணிகண்டன் இருவரும் தங்களது முதுகையே படிக்கட்டாக மாற்றி அந்தப் பெண்ணை பத்திரமாக தரை இறங்க உதவினர்.
இதைக் கேள்விப் பட்டு, ஆயுதப்படை காவலர்கள் தனசேகர், மணிகண்டன் இருவரையும் நேரில் அழைத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.