நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியில் உள்ள படகு குழாத்தைப் பூட்டுப் போட்டு பூட்டி, பணியாளர்கள் போராட்டம் நடத்தின் வருகின்றனர்.
குற்றாலம் சீஸன் காலம் என்பதால், படகு குழாத்துக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர். குற்றாலத்தில் அருவிகளில் குளிப்பது மட்டுமின்றி, இங்குள்ள பூங்காக்கள், பாம்புப் பண்ணை உள்ளிட்டவற்றில் நேரம் செலவழிப்பது, படகுக் குழாத்தில் படகுகளில் சவாரி செய்வது என சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பொழுதுபோக்குகின்றனர்.
இந்நிலையில், படகுக் குழாத்தில் பணிபுரிபவர்களை புதிதாகப் பொறுப்பேற்ற மேலாளர் மகேஷ் குமார் தரக் குறைவாகப் பேசியதாகக் கூறி படகு குழாத்தைப் பூட்டி பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.