சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி வழக்கு தொடுக்க வைகோவுக்கு உரிமை கிடையாது என்று, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சார்பு செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தில் வைகோவின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல என்று ஜெனீவா நீதிமன்றம் கூறியுள்ளதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
விடுதலை புலிகள் மீதான தடை, அடிப்படையிலேயே நிராகரிக்கப்பட்ட வேண்டும் என வாதிட்டு வருகிறேன் என்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வைகோ செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
விடுதலை புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல என ஜெனீவா நீதிமன்றம் கூறியுள்ளது. இவ்வழக்கினை ஆக.14-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.