சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பு வழங்கியதில் நீதிபதிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பளித்திருக்கிறாரோ என்று தாம் நினைப்பதாக டிராபிக் ராமசாமி ஊடகவியலாளர் ஒருவருடன் உரையாடினார். இந்த ஆடியோ வைரலானது.
இது தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், டிராபிக் ராமசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க வேண்டும் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தற்காலிக தலைமை நீதிபதி உளுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு முறையீடு செய்தார்.
இது தொடர்பாக முறையாக மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், டிராபிக் ராமசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.