ஒரே ஆண்டில் 2வது முறையாக… நிரம்பியது மேட்டூர் அணை!

கடந்த 2004ல் ஒரே வருடத்தில் 4 முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன் பின்னர் தற்போது ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.

ஏற்கெனவே கேரளா மாநிலம் மழை வெள்ளத்தில் சிக்கித்தவிப்பதால் கேராளாவிற்கு திறந்து விட வேண்டிய நீரையும் சேர்த்து, காவிரியில் திறந்து விட்டுள்ளனர். இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளதால் அணை நிரம்பி வழிகிறது.  நீர் இருப்பு 92.01 டி.எம்.சி.யாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியில் இருந்து 1 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

காவிரியிலிருந்து அதிக நீர் வெளியேற்றப்படுவதால், தமிழகத்தில் காவேரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.