திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் மதகுகள் உடைந்தது ஒரு விபத்தே என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் உடைந்த 9 மதகுகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி. முதல்வருடன் அமைச்சர்கள் காமராஜ், துரைகண்னு, வெல்லமண்டி நடராஜன், வளர்மதியும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணி 4 நாட்களில் முடியும்; திருச்சி முக்கொம்பில் மதகுகள் உடைந்த மேலணைக்கு பதில் ரூ.325 கோடியில் புதிய கதவணை கட்டப்படும்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்ததிற்கும் மணல் குவாரிக்கும் எந்த தொடர்பும் இல்லை; திருச்சி முக்கொம்பில் மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது
அதிக அளவில் வெள்ள நீர் வெளியேறியதால் அழுத்தம் காரணமாக பழமையான அணையின் மதகு உடைந்தது. மதகுகள் உடைந்தது விபத்தே’ முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்ததிற்கும் மணல் அள்ளியதற்கும் எந்த தொடர்பும் இல்லை; மேலணையில் இருந்து வெகுதொலைவில் உள்ள குவாரியில்தான் மணல் அள்ளப்படுகிறது
புதிய கதவணைகள் பணி விரைவில் தொடங்கி 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று முக்கொம்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி கூறினார்.
இதனிடையே, கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 3,032 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது . வெண்ணாற்றில் வினாடிக்கு 3,000 கனஅடியும், கல்லணை கால்வாயில் 3,406 கனஅடியும் நீர் திறக்கப் படுகிறது.