‘பாரத் பந்த்’தா? ‘பாரத் ரத்னா’வா? இதுதான் திமுக.,வின் மனநிலை: கரூரில் தம்பிதுரை சாடல்!

Published:

maxresdefault 16 - 2026

கரூர்: பா.ஜ.க அரசை எதிர்க்கும் திராணி மு.க.ஸ்டாலினிடம் இல்லை, பாரத் பந்தா, பாரத ரத்னாவா ? என்ற மனநிலையில் அவர்கள் என்று கரூர் அருகே தி.மு.க.,வை சாடினார் மக்களவை துணைத்தலைவர் தம்பித்துரை.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கருங்கல்பட்டி, ஜமீன் ஆத்தூர் காலனி, வல்லப்பம்பட்டி, சாமிநாதபுரம், அம்மாபட்டி, சங்கரணாபட்டி, கணவாய், கடம்பங்குறிச்சி, நடுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மக்களவை துணை சபாநாயகரும், கரூர் மக்களவை உறுப்பினருமான தம்பித்துரை மக்களிடம் மனுக்களை கேட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை., பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு காரணமே, இன்றைய மத்திய அரசும், முந்தைய மத்திய அரசும் தான். வெளிநாடுகளிலிருந்து நமது நாட்டிற்கு பெட்ரோல் கொண்டு வரும் போது எக்ஸைஸ் தொகை, கலால் வரி மட்டுமில்லாது செஸ் வரி என்பதை மட்டுமில்லாமல் விலை நிர்ணயிக்கும் உரிமையை தனியாரிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. முந்தைய காங்கிரஸ், தி.மு.க கூட்டணியின் மத்திய அரசிடமும், தற்போதைய பா.ஜ.க அரசும், அதே கொள்கையை எடுத்துள்ளதாலும், மாநில அரசுகளுக்கு வருவாய் குறைந்துள்ளது.

இந்த நிலையில் ஜி.எஸ்.டி என்ற வரி வந்த பிறகு முழுக்க, முழுக்க, நேரடியாக வரியானது மத்திய அரசிற்கே சென்றுள்ளது. ஆகவே, பா.ஜ.க சொல்வது போல, இந்த பெட்ரோல் விலை உயர்விற்கு காரணம் மாநில அரசு அல்ல, மத்திய அரசின் வரி விதிப்பு தான்!

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

தி.மு.க கட்சியானது, பா.ஜ.க உடன் கூட்டணியா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது நான் (தம்பித்துரை) ஏற்கனவே சொன்னது போல, தி.மு.க வை பொறுத்தவரை, பா.ஜ.க வுடன் நல்ல இணக்கத்தினை வைத்துள்ளதோடு., தற்போது பா.ஜ.க அரசிற்கு எதிரான பாரத் பந்தில் அதிக அளவில் அக்கறை காட்டவில்லையே! ஆகவே, மாநில அரசிற்கு எதிரான போராட்டங்கள் என்றால், பஸ்ஸை கல்லைவிட்டு எறிந்து நொறுக்குவார்களே, தவிர தற்போது மத்திய அரசினை எதிர்க்கும் திராணி ஸ்டாலினுக்கு கிடையாது! வெறும் அறிக்கை மூலம் தான் ஸ்டாலின் எதிர்ப்பை காட்டுகின்றார். ஆகவே, தி,மு.க விற்கு பாரத ரத்னாவா, பார்த் பந்தா என்று ஏற்கனவே நான் சொல்லியது போல, அவர்கள் அந்த மனநிலையில் பாரத் பந்தில் கலந்து கொள்ளவில்லை என்றார்.

அவரது பேட்டி… காணொளி :

Related articles

Recent articles

spot_img