edappadi palanisamy3 - 2026

காஞ்சிபுரம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காஞ்சிபுரம் வந்துள்ளார். இன்று காஞ்சிபுரத்தில் நடைபெறும் அண்ணாதுரை பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

விஷ்ணு காஞ்சி எனப்படும் சின்ன காஞ்சிபுரத்தில், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ல அண்ணாதுரை நினைவு இல்லத்துக்கு வரும் எடப்பாடி பழனிசாமி, அங்கே அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.

எடப்பாடியார் இருப்பது அண்ணாதுரை வீட்டில்; ஆனால் அவருக்கு பூர்ணகும்பம் மாலை மரியாதை சுற்றிலும் உள்ள கோயில்களில் இருந்து தேடி வந்து கொடுக்க வேண்டும் என்று வாய் மொழி உத்தரவு இடப் பட்டிருப்பதாகக் கூறப் படுகிறது. இதனால் கோயில் அதிகாரிகள், விழி பிதுங்கி உள்ளனர்.

பொதுவாக, கோயில் கோபுரம் அல்லது கோயில் வாசலுக்கு வருபவர்களுத்தான் பூரண கும்பம் வைத்து உள்ளே அழைக்க மரியாதை செய்வது வழக்கம். ஏற்கெனவே ஸ்டாலின் திருவரங்கத்தில் ஒரு பூர்ணகும்ப மரியாதை சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இப்போது எடப்பாடியார் முறை.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending