தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமானத்தில் பயணம் செய்த போது அநாகரிகமான வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் பாரதிய ஜனதா கட்சி குறித்து அவதூறாகப் பேசினார் சோபியா என்ற பெண்.
இது குறித்து தமிழிசை அளித்த புகாரின் பேரில் சோபியா கைது செய்யப் பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று ஆஜராகுமாறு மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை விசாரித்துவரும் காவல்துறை விசாரணை அதிகாரி, சோபியா, சோபியா தந்தை அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி, சோபியா மற்றும் அவரது தந்தை சாமி ஆகியோர் வழக்கறிஞர்களுடன் நெல்லை வண்ணாரப்பேட்டை அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகையில் மனித உரிமைகள் ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று ஆஜராகினர்.