01 June01 vaiko - 2026

மதிமுக உருவெடுத்த அரவக்குறிச்சி ஒன்றியத்தில் மதிமுக நிர்வாகிகள் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர்.

அரவக்குறிச்சி ஒன்றிய மதிமுக செயலாளர் கோ.கலையரசன் தலைமையில் மதிமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர்.

மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் கபனி சிதம்பரம் ஆகியோர் மீது உள்ள அதிருப்தியின் காரணமாக 25 ஆண்டு காலமாக மதிமுகவில் இருந்து வந்த நிர்வாகிகள் அனைவரும் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளனர்.

இவருடன், கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர்கள் , 2 மாவட்ட நிர்வாகிகள், 2 நகர செயலாளர்கள் மற்றும் மாநில விவசாயிகள் அணி முன்னாள் செயலாளர் என அனைவரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளனர்.

மதிமுக., கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தொண்டர்கள் விரும்பாத சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் வைகோ. அவ்வப்போது எடுக்கும் அவரது முடிவுகள் கட்சிக்கு பாதகமாகவே அமைந்திருந்தன. இந்நிலையில், தன் மீது இத்தனை நாட்களாக விசுவாசம் வைத்திருந்த கட்சியினர் பலரையும் வைகோ இழந்துவருகிறார்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending