tamilisai soundarrajan - 2026
File copy

சென்னை : கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே கட்ட முயற்சி செய்து வரும் மேகேதாட்டு அணை முயற்சியை நாங்கள் எதிர்ப்போம் என்று கூறினார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

சென்னை கே.கே.நகரில் மத்திய அரசு சார்பில் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் ஜெனிரிக் மருந்தகத்தை தமிழிசை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என திருநாவுக்கரசர் மற்றும் மு.க.ஸ்டாலினிடம் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சொல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.

மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டுவதை தமிழக பாஜக., எதிர்க்கும் என்றார். மேலும், கருணாநிதி சிலை திறப்பிற்கு ரஜினி செல்வதால் கூட்டணி ஒன்றும் மாறி விடாது. கருணாநிதி சிலை திறப்பு விழாவை திமுக கூட்டணிக் கட்சிகளின் விழாவாகத் தான் பார்க்க வேண்டும் என்றார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending