01 July31 M K Stalin - 2026

லோக் ஆயுக்தா தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று திமுக., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக அரசு பணியாளர், நிர்வாக சீர்த்திருத்துறை செயலாளருக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,

லோக் ஆயுக்தா அமைப்பு தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்ய நாளை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் அமைய இருக்கும் லோக் ஆயுக்தா அமைப்பு அதிகாரமற்றது.

ஊழல் புகாருக்கு ஆளான முதல்வர், கூட்டத்தில் பங்கேற்பது ஊழலை ஒழிக்க உதவாது.

முதல்வர் அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிப்பது லோக் ஆயுக்தா.

ஊழல் புகார் கொடுப்போர் அஞ்சும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று மு.க. ஸ்டாலின். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேடுதல் குழுவை அமைப்பதற்காக நாளை தேர்வுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் தலைமையிலான 3 பேர் தேர்வுக்குழு ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைவராக இடம்பெறும் 5 பேர் குழுவாக இல்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துணைச் செயலாளர் தலைமையில் விசாரணைக் குழு என்பது வலுவற்றது; யாரும் செல்வாக்கு பிரயோகித்திட இயலாத; கடுமையான நடவடிக்கை எடுக்கும் அமைப்புக்குப் பதில் அரசுக்கு பரிந்துரை செய்யும் அஞ்சல் நிலையம் போன்ற அமைப்பாகவே லோக் ஆயுக்தா உருவாக்கப்படுகிறது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

பல்லும் இல்லாத பவரும் இல்லாத அச்சடித்த பதுமை போன்று அசைய முடியாத செயலற்ற அமைப்பை ஏற்படுத்த அ.தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது.; உள்ளீடற்ற, வலிமையற்ற தக்கை போன்ற லோக் ஆயுக்தா அமைப்பை தி.மு.க. எதிர்ப்பதாகக் கூறியுள்ள ஸ்டாலின், இந்தத் தேர்வுக் குழுக்கூட்டத்தில் பங்கேற்பது ஊழல் ஒழிப்பிற்கு உதவாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending