edappadi1 - 2026

ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்கள் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.2.000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இது குறித்த அறிவிப்பு அண்மையில் பட்ஜெட் தாக்கலின் போது வெளியிடப் பட்டது.

மேலும், கட்டிட தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கப் படும் என்று எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பினையும் வெளியிட்டார்.

அம்மா உணவகங்களில் கட்டட தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர்  எடப்பாடி கே. பழனிசாமி  இன்று தொடங்கி வைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending