மெட்ரோ ரயில் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்திய கா்ப்பிணி பெண் கைதால் பரபரப்பு….!

 மெட்ரோ ரயில் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்திய கா்ப்பிணி பெண் கைதால் பரபரப்பு....!

சென்னை மெட்ரோ ரயில்வே இணை பொது மேலாளராக இருப்பவர் பார்த்திபன். இவர், கோயம்பேடு போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராமனிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், எங்கள் நிறுவனத்தில் உதவி கணக்காளராக (கேஷியராக) பணிபுரிந்தவர் பர்கத் பானு. இவர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பர்கத் பானு, வேலையை ராஜினாமா செய்தார்.

அதன்பிறகு அவரின் வேலையைப் பார்த்தவர்கள் பர்கத் பானு செய்த முறைகேடுகளைக் கண்டறிந்தனர்.

இதுவரை அவர், 23 லட்சத்து 53 ஆயிரத்து 300 ரூபாய் மோசடி செய்துள்ளார். அதாவது. இந்தப் பணத்தை தனக்குத் தெரிந்த ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு அவர் மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, விசாரணை நடத்தி பர்கத்பானு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

அதன்படி இன்ஸ்பெக்டர் தீபக்குமார் விசாரணை நடத்தியதில் கேஷியர் பர்கத் பானு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் அவர், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பணத்தை தன் உறவினரான முகமத் ஜனத் என்பவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி மோசடி செய்துள்ளார்.

இதையடுத்து அவரை போலீஸார் தேடிவந்தனர்.

தலைமறைவாக இருந்த பர்கத் பானு, செம்மஞ்சேரி காமராஜ் நகரில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து பர்கத் பானு போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தில் நான் கேஷியராகப் பணியாற்றியபோது என்னுடைய உறவினரின் வங்கிக் கணக்கிற்கு கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை அனுப்பினேன்.

பிறகு வேலையை விட்டு நின்றுவிட்டேன். நான் செய்த முறைகேட்டை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

அந்தப் பணத்தில் ஆடம்பரமாக சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டேன்.

மேலும், அந்தப் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன். ஆனால், என்னுடைய முறைகேட்டை கண்டுபிடித்துவிட்டனர்.

என்னை போலீஸார் தேடுவதாகத் தெரிந்ததும் தலைமறைவாக இருந்தேன். ஆனால், என்னை போலீஸார் பிடித்துவிட்டனர்” என்று கூறியுள்ளார்.

இந்த முறைகேட்டில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

மேலும், பர்கத் பானுவிடமிருந்து போலீஸார் 8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.

பணத்தை திரும்பக் கொடுத்துவிடுவதாக பர்கத் பானு தரப்பிலிருந்து போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதற்கு, `பர்கத் பானுவின் நிலைமையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் உள்ளது. இருப்பினும் அவர் செய்த முறைகேடுகள் ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் எங்களால் எதுவும் செய்ய முடியாது’ என்று போலீஸார் தெரிவித்துவிட்டனர்.

அதைக் கேட்ட பர்கத் பானு காவல் நிலையத்திலேயே கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார். கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.

பர்கத் பானுவை முழுமையாக ரயில்வே அதிகாரிகள் நம்பியுள்ளனர். இதனால்தான் பண பரிவர்த்தனைகளை அதிகாரிகள் ஆரம்பத்தில் கண்டுகொள்ளவில்லை.

அவர் வேலையை விட்டு நின்றபிறகு கணக்குகளை ஆய்வுசெய்தபோது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பணம், தனிப்பட்ட ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நபர் குறித்து விசாரித்தபோது அவர் பர்கத் பானுவின் உறவினர் என்று தெரியவந்தது.

அதன்பிறகுதான் பர்கத் பானு மீது ரயில்வே அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவர் வேலை பார்த்த காலகட்டங்களில் நடந்த பணப் பரிவர்த்தனை அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மொத்தம் 23 லட்சம் ரூபாய்க்கு மேல் பர்கத் பானு முறைகேடு செய்தது தெரியவந்தது.

தற்போது பர்கத் பானு, கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அவரின் விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.

கேஷியராக பணியாற்றிய பர்கத்பானு, ரயில்வே பணிகளில் ஈடுபடும் ஒப்பந்த நிறுவனங்களுக்குப் பணத்தை ரயில்வே வங்கிக் கணக்கு மூலம் அனுப்புவார்.

ஆரம்பத்தில் நேர்மையாக இருந்த அவர், பணத்தைப் பார்த்ததும் மனம் மாறியுள்ளார்.

இந்தச் சமயத்தில் பர்கத் பானுவுக்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளது.

அதற்கும் பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால்தான் பர்கத் பானு, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டிய பணத்தை உறவினரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

சில மாதங்களுக்குப் பிறகு இந்த முறைகேட்டை ரயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட பர்கத் பானு, சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...