ஆவுடையார்கோயில்
ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா 9ம் நாள் விழாவை முன்னிட்டு மாணிக்கவாசகர் ஊர்த்துவதாண்டவ காட்சி கொடுத்தார்.
ஆவுடையார்கோயிலில் உலக பிரசித்தி பெற்ற ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது.இக்கோயில் பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட திருவாவடுதுறை ஆதீனகட்டுபாட்டில் உள்ள கோயிலாகும்.இக்கோயிலில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு மாணிக்கவாசகர் காலையில் வெள்ளிப்படிச்சட்டத்தில் ஊர்த்துவதாண்டவகாட்சியும் மாலையில் வெள்ளியானை வாகனத்தில் யானைபடைதளபதியாகவும் காட்சி கொடுத்தார். விழிாவில் பஞ்சசுத்து வீதிஉலா நடந்தது இதில் பிரதோஷ நடனம் ஆடும் உடுமலை செந்தில் நடனம் ஆடினார்.

ஏற்பாடுகளை திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானத்தின் உத்தரவுப்படி திருவிடைமருதுார் கட்டளை தம்பிரான் சாமிநாதசுவாமிகள்,தென்மண்டல மேலாளர் ராமச்சந்திரன்,மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன்,கண்காணிப்பாளர் சுப்ரமணியன் செய்தனர்.கோயில் பணிகளை பாலசுப்ரமணிய நம்பியார் தியாகராஜ மாணிக்ககுருக்கள்

செய்தனர.03 dhinasari news file - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending