நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

சென்னை:
நக்கீரன் கோபால் மீது தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகள் மீதான விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழக அரசையும், அமைச்சர்களையும் விமர்சித்து செய்தி வெளியிட்டதாகக் கூறி நக்கீரன் இதழாசிரியர் கோபால் மீது கடந்த 2012 முதல் சென்னை பெருநகர மாவட்ட நீதிமன்றத்தில் 18 குற்றவியல் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் 11 வழக்குகளும், இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சார்பில் 7 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த 18 வழக்குகளின் விசாரணையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்தது. விசரணையின்போது, நக்கீரன் கோபால் மீதான 18 வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்தும், இதற்கு பெருநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.