நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் ரூ.10.95 கோடி மதிப்பிட்டில் அடிப்படை வசதிகளுக்கான திட்டங்களை அமைச்சர் தங்கமணி துவங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊராட்சி பகுதிகளில் தடை இல்லா மின்சாரம் கிடைக்க 1659 கோடி செலவில் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் தற்போது 2000 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. விற்பனை 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்டை மாநிலத்திலிருந்து மது பானங்கள் வந்துவிடும் என்ற காரணத்தால் தமிழகத்தில் படிப்படியாக கடைகள் குறைக்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் எதுவும் புழக்கத்தில் இல்லை. காவல்துறையினர் முழுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க் கட்சிகள் அப்படி நடப்பதாக, யார் எங்கு என்று குறிப்பிட்டு புகார் தெரிவித்தால் பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.