pudukottai-thandapani-temple
pudukottai-thandapani-temple

புதுக்கோட்டை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டைமேலராஜ வீதிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில்  கந்தசஷ்டியை முன்னிட்டு, தண்டாயுதபாணி சுவாமிக்கு தினமும் பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர்,  திருநீறு உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை நடைபெற்றது. மாலையில் தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார் ஏற்பாடுகளை  நிர்வாகிகள் மற்றும் பாலு அய்யர் சிறப்பாக கவனித்தனர்.

இதேபோன்று கீழ 4ஆம் வீதிலுள்ள{தென்புறம்}ஸ்ரீமுத்துமாரியம்மன்  கோவிலில் முருகனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடைபெற்றது. மாலையில், முருகப்பெருமான்  சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும்  அருள் பாலித்தார். திரளான  பக்தர்கள் வந்திருந்து  வழிபட்டனர்.   

  • செய்தி / படங்கள்: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending