வெள்ளத்தில் நல்ல வெள்ளம்!

வெள்ளத்தில் சென்னை வெள்ளம்
வடியாதென்பது வல்லவன் வகுத்தடா – வருணா
எம்மிடம் அருள் செய்யடா…

குடியேற இடம்தேடி
கூடாத செயல் செய்து
ஏரிகள் தூர்த்தோமடா – வருணா
உன்னிடம் தோற்றோமடா…

கால்வாய்க்கு வழியில்லை
நீர்வடிய வழியுமில்லை
வீடுகள் மிதக்குதடா – நீயும்
தண்டித்தல் அறமல்லடா…

மழைவெள்ளம் வடியாமல்
மனம்நொந்த மக்களுக்கு
தாயுள்ளம் காட்டிடடா – வருணா
ரேஷனில் மழை பெய்யடா…

***
கவிதை: பெ. கருணாகரன்