மதுரை மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில், மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மதுரைக்கு, மு.க.ஸ்டாலின் வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் வருவதற்கு தடை விதிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்டாலின் பயணத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்றும், மு.க. அழகரி, மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கிடையே மோதல் போக்கு நிலவுவதால், வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்மானத்தின் நகலை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending