கண்ணூரில் கம்யூனிஸ்ட் குண்டர்கள் அராஜகம்! 83 வயது ஆர்.எஸ்.எஸ்., தொண்டரை அடித்து உதைத்த கொடூரம்!

Reporters Diary இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி
kannur chandrasekar - 2026

கேரள மாநிலம் கண்ணூரில் கம்யூனிஸ்ட்களின் அராஜகத்துக்கு இலக்காகியுள்ளார் 83 வயது ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் சந்திரசேகரன்.

கண்ணூர் கிரிக்கெட் கிளப் செயலாளராகவும், கடந்த 1943ல் இருந்து ஆர்.எஸ்.எஸ்., தொண்டராகவும் இருந்து வரும் சந்திரசேகரன் இல்லத்துக்குள் புகுந்த கம்யூனிஸ்ட் குண்டர்கள் குழு, வீட்டில் இருந்த பொருள்களை எடுத்து உடைத்தது. அங்கிருந்த பூஜைப் பொருள்களை நாசப் படுத்தி, வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருள்கள், பூஜைப் பொருள்களை நாசப் படுத்தி, எடுத்துச் சென்று கிணற்றில் போட்டுள்ளனர்.

சந்திரசேகரன் கடுமையாகத் தாக்கப் பட்டுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கோபத்தையும் அதிருப்தியையும் பகிர்ந்து வருகின்றனர்!

ஏற்கெனவே கண்ணூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ரத்தக்களறியில் ஈடுபடும் நிலையில், சபரிமலை விவகாரத்தால் மேலும் மேலும் வன்முறைகள் பெருகியுள்ளன. இந்நிலையில், கேரளத்தை கம்யூனிஸ்ட் குண்டர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.