சமாதில வெச்ச ஆசை… ரெண்டுமே நிறைவேறாது போலிருக்கே…!

Reporters Diary அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

karunanidhi samadhi - 2026

கருணாநிதி சமாதில வெச்ச ஆசை… ரெண்டுமே நிறைவேறாது போலிருக்கிறது மு.க.ஸ்டாலினுக்கு!

இருக்கு ஆனா இல்ல; ரொம்ப நல்ல ஜாதகம் என்று கலாய்க்கின்றனர் மு.க.ஸ்டாலினை! தமிழகத்தில் அதிக இடங்கள் பெற்று எம்.பி.க்கள் இருந்தாலும், திமுக.,வால் அடுத்து சாதிக்க முடியாது போலிருக்கிறது.

நம் கையில் மாநில அரசு! நாம் காட்டுவதே மத்திய அரசு! என்று எழுதி கருணாநிதியின் சமாதியில் அலங்காரம் செய்த திமுக., தலைவர் ஸ்டாலினின் பேராசைகள் அப்படியே சமாதியாகி விட்டன என்று கிண்டல் அடிக்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் தபால் வாக்குகள் எண்ணப் பட்ட போது திமுக., அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. ஆனால், தொகுதி வாரியாக எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் நிலையில், அதிமுக., 11 இடங்களில் முன்னிலையும் திமுக., 10 இடங்களில் முன்னிலையும் பெற்று வருகிறது.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்? இந்து முன்னணி அதிருப்தி

அதே போல், மத்தியில் பாஜக., கூட்டணி பெரும் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலினால் கைகாட்டப் பட்ட ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அதே நேரம் வயநாடில் முன்னிலை பெற்று வருகிறார். காங்கிரஸ் கூட்டணியும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

இதனால் ஸ்டாலினால் அதிக தொகுதி பெற்றாலும், மத்தியிலும் ஆட்சியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல், தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பு இல்லை எனும் சூழல் எழுந்துள்ளது. இன்னும் முழுமையான முடிவுகள் வரவில்லை என்றாலும், தொடக்க கட்ட முன்னிலை நிலவரங்களை வைத்து, இப்போதே சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.