நட்பை விட நாடு உயர்ந்தது! என்.ஐ.ஏ.,வுக்கு உதவுங்கள்!

Reporters Diary அடடே... அப்படியா? புகார் பெட்டி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

nia office - 2026

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவுங்கள் என்று தலைப்பிட்டு, ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் இயங்கங்களின் தூண்டுதலில் சிலர் சுதந்திர தினத்தன்று கறுப்புத் துணி அணிந்து, மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அத்தகையவர்களைக் கண்டறிந்து அவர்களின் பின்னணியை என்.ஐ.ஏ., விசாரிக்க உதவ வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு வைரலாகியுள்ளது.

அதில்…

இந்த ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி உங்கள் #பேஸ்புக் / #வாட்சப் வட்டாரங்களில் எவரேனும் , அல்லது ஏதேனும் குழுவோ இந்திய இறையாண்மைக்கு குந்தகமான பதிவுகள் … போட்டிருந்தாலோ,
சுதந்திர தினத்தை புறக்கணியுங்கள் என்ற வகையில் பதிவிட்டு
இருந்தாலோ அப்படியே #screenshot எடுத்து கீழ்கண்ட #NIA #இணையதளத்தில் #புகார் தெரிவிக்கவும் அல்லது #மின்னஞ்சல் அனுப்புவதும். #நட்பை_விட #நாடே #உயர்ந்தது .

#வாழ்கபாரதம், #வளர்கதமிழகம். info.nia@gov.in https://www.nia.gov.in/contactus.htm – என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.