sumart school - 2026

உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் 8-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவன் அரைநாள் விடுப்பு தருமாறு தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டுள்ளார்.
இதையடுத்து மாணவன் விடுப்புக் கடிதம் எழுதியுள்ளான். அதில், ‘நான் இன்று காலை

letter - 2026

10 மணியளவில் இறந்துவிட்டதால் சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும்’ என எழுதியிருந்தான். தன் பாட்டி இறந்து விட்டதாக எழுதுவதற்கு பதில் அவ்வாறு எழுதியுள்ளான். இதை கவனிக்காத தலைமை ஆசிரியரும் கையொப்பமிட்டு அனுமதி வழங்கியுள்ளார்.

மாணவரின் இந்த விடுப்புக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வேடிக்கையான நிகழ்விற்கு பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending