அக்டோபர் 28ம் தேதி அனைத்து இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவு.!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள்
mutton stall - 2026

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு 28ம் தேதி அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்பட வேண்டும் – அரசு உத்தரவு

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, வரும் 28ம் தேதி அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்பட வேண்டும் என, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, வருகிற 28ம் தேதி திங்கட்கிழமை அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே அரசு உத்தரவின்படி, கண்டிப்பாக வரும் 28ம் தேதி அனைத்து இறைச்சி கூடங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

அரசு உத்தரவை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.