
தமிழகத்தில் முக்கியமான நெல்லை-பாளையங்கோட்டை நகரங்களை இணைக்கும் விதத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுலோச்சன முதலியார் பாலத்தின் அருகில் கூடுதலாக ஒரு பாலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நெல்லை ஜங்ஷன், பாளை., ஆகிய இரட்டை நகரங் களை இணைக்கும் வகையில் 175 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுலோச்சனா முதலியார் பாலம் கட்டப்பட்டது.
நாளடைவில் இந்த பாலம் அகலப்படுத்தப்பட்டது. தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் காலை, மாலை நேரங்களில் பாலத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெ., கொக்கிரகுளத்தில் புதிய பாலம் கட்டப்படும் என அறிவித்தார்
தற்போது 90 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்துள்ளதால் ஓரிரு மாதத்தில் போக்குவரத்து தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் .