கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சுற்றுலா மதுரை

Kumbakarai falls in Theni - 2026

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளனர்.

கடந்த 10 நாட்களாக நீர்வரத்து அதிகமாக இருந்ததன் காரணமாக சுற்றுலா பயணிகளை வனத்துறை அனுமதிக்க வில்லை. இந்த நிலையில் இன்று காலை முதல் நீர் வரத்து சீரானது. இதனால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

இந்தக் கோடைக் காலத்திலும் நீர் விழுவதால்,சுற்றுலா பயணிகள் அதிகம் சென்று வரும் இடமாக கும்பக்கரை விளங்குகிறது. இந்நிலையில் வனத்துறையினர் குளிக்க அனுமதி அளித்திருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.