புதுக்கோட்டை: இலங்கைக்கு பிரதமர் மோடி செல்லும்போது, மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கூறினார். புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அதிபராக சிறிசேனா பொறுப்பேற்ற பிறகு, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 86 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். இந்தியப் பிரதமர் மோடி இலங்கை செல்லும்போது, மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் -என்றார்.
இலங்கைக்கு மோடி செல்லும்போது மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்: எச்.ராஜா
Popular Categories



