கோவை: தன்னுடன் பழகியபோது, உல்லாசமாக இருந்த வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு, பிறகு மிரட்டியதால் பயந்து போன மாணவி, அவனுக்கு பணம் கொடுப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார். கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர்கள் சந்திரமோகன், சந்திரசேகர், ராஜேஸ்வரி, துணை ஆய்வாளர்கள் சாஸ்தா மற்றும் காவல்துறையினர் அடங்கிய தனிப்படையினர் அந்த விடுதியைத் தீவிரமாகக் கண்காணித்தனர். அப்போது அந்த விடுதியில் பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுவது உறுதிகத் தெரிந்துள்ளது. அவர்களைப் பிடிக்க முடிவு செய்த காவல்துறையினர், அதிரடியாக அந்த விடுதிக்குள் புகுந்து சிலரைக் கைது செய்தனர். பின்னர், பொறியியல் கல்லூரி மாணவி உள்பட 3 பெண்களை காவல்துறையினர் மீட்டனர். அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கோவைப்புதூர் திருப்பதி நகரைச் சேர்ந்த பிருத்திவிராஜ்(32), அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி விஜயலட்சுமி(38) ஆகியோரையும் கைது செய்தனர். இந்த விவகாரத்துக்குப் பயன்படுத்திய கார், 2 செல்போன்கள், ரூ.1 லட்சத்து 1,860 ஐ பறிமுதல் செய்த போலீஸார், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது 3 பெண்களில் ஒருவரான அந்த மாணவி, தான் கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்து வருவதாகவும், மதுரையைச் சேர்ந்த இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவரை காதலித்ததாகவும் கூறியுள்ளார். இருவரும் நெருங்கி பழகியபோது பல்வேறு இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்ததாகவும், அந்தக் காட்சிகளை மாணவர் இவருக்குத் தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்ததாகவும் கூறியுள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்த நிலையில், அந்த மாணவர் மீண்டும் மாணவியைச் சந்தித்து, நாம் இருவரும் உல்லாசமாக இருந்த காட்சியை வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன். நான் கேட்கும் பணத்தை நீ தர வேண்டும். இல்லாவிட்டால் அதனை இணைய தளங்களில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டினாராம். இதனால் அவமானம் என்பதை உணர்ந்து அந்த மாணவி முதலில் தான் அணிந்திருந்த நகைகளை விற்று பணத்தைக் கொடுத்ததாகவும், பின்னரும் அந்த மாணவர் தொடர்ந்து பணம் கேட்டதால் பாலியல் தொழிலில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அந்த மாணவரிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
‘பழகிய’ வீடியோவை வைத்து மிரட்டியவனுக்கு பணம் கொடுக்க பாலியல் தொழிலில் ஈடுபட்ட மாணவி!
Popular Categories



