புது தில்லி: 5 மாநிலங்களின் தலைவர்களை தூக்கி விட்டு புதிய தலைவர்களை நியமித்துள்ளது காங்கிரஸ் மேலிடம். ராகுல் காந்தியின் முக்கிய ஆதரவாளரான அஜய் மக்கன் தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அசோக் சவான் மகாராஷ்டிர தலைவர் ஆகியுள்ளார். குலாம் அகமது மிர் ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பரத்சிங் சோலங்கி குஜராத் மாநில காங்கிரஸுக்கு தலைவராகியுள்ளார். தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவராக உத்தம் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரான சஞ்சய் நிருபம், மும்பை பிராந்திய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றங்களை காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி வெளியிட்டுள்ளார். குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக அர்ஜுன் மோத்வாடியா செயல்பட்டு வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறாததை தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து காலியாக இருந்த மாநில தலைவர் பதவிக்கு முன்னாள் முதல்–மந்திரி மாதவ்சிங் சோலங்கியின் மகன் பரத்சிங் சோலங்கி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை சோனியா காந்தி நியமித்து இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் குருதாஸ் காமத் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம் : புதிதாக நியமித்து மேலிடம் அதிரடி
Popular Categories



