சந்தேகப்பட்டதன் பேரில் சக தொழிலாளியைத் தாக்கிக் கொன்ற தமிழக இளைஞருக்கு 16 ஆண்டு சிறையும் 12 பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி தேவராஜன்(23) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். ஒரு நாள், தனது பணப்பையைக் காணாமல் தேடிய அவர், அதை சக தொழிலாளியான ராஜு அறிவழகன்(31) என்பவர்தான் எடுத்திருக்க வேண்டும் என அவர்மீது சந்தேகப்பட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ராஜுவின் தலையில் கனமான கல்லைத் தூக்கிப் போட்டு தாக்கியுள்ளார். இதில் ராஜு அறிவழகன் உயிரிழந்துள்ளார். இதனால், ராஜுவைக் கொன்று விட்டதாக பெரியசாமி மீது சிங்கப்பூர் போலீசார் குற்றச்சாட்டு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமி தேவராஜனுக்கு 16 ஆண்டு சிறைக் காவல் தண்டனையும் 12 பிரம்படியும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
சந்தேகத்தில் சக தொழிலாளியைக் கொன்ற தமிழக இளைஞருக்கு சிங்கப்பூரில் 16 ஆண்டு சிறை
Popular Categories



